யாழில் டெங்கு காய்ச்சலால் பெண் ஒருவர் உயிரிழப்பு !

You are currently viewing யாழில் டெங்கு காய்ச்சலால் பெண் ஒருவர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலால் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். வடமராட்சி பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (31-10-2022) மாலை அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

மறுநாளான  செவ்வாய்  (02-11-2022) அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பயனின்றி  (03-11-2022) வியாழக்கிழமை காலை அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை

யாழில் அதிகாலையில் வீட்டில் இருந்து காணாமல் போன வயோதிபர் ஒருவர் தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம்  நேற்றைய  தினம் (03-11-2022) கலட்டி கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கலட்டி கரணவாய் கிழக்கை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க வயோதிபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் காணாமல் போனதை அடுத்து அவரது உறவினர்களால் நெல்லியடி சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் கரணவாய் பகுதியில் உள்ள கிணற்றில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply