யாழில் தவறான முடிவெடுத்து பாடசாலை மாணவன் உயிர்மாய்ப்பு!

You are currently viewing யாழில் தவறான முடிவெடுத்து பாடசாலை மாணவன் உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணம்  வடமராட்சி பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

குறித்த மாணவன் நேற்றைய தினம் (07) இரவு 7:30 மணியளவில் தனது வீட்டில் தவறான முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

கரவெட்டி – மத்தணி பகுதியைச் சேர்ந்த நகுலேஸ்வரன் யக்சன் என்ற வயது 14 மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

உயிரிழந்த குறித்த மாணவன் யா/ கரவெட்டி இருதயக்கல்லூரியில் தரம் 9இல் கல்வி கற்று வந்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த மாணவன் நேற்றைய தினம் (07) இரவு 7:30 மணியளவில் தனது வீட்டில் தவறான முடிவெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply