யாழில் திருமணமாகி நான்கு மாதங்களில் இளம் குடும்பப்பெண் மரணம்!

You are currently viewing யாழில் திருமணமாகி நான்கு மாதங்களில் இளம் குடும்பப்பெண் மரணம்!

யாழில் திருமணமாகி நான்கு மாதங்களேயான இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

தெல்லிப்பழை – மாவை கலட்டி, கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த சுகிர்தராசா நிதர்சினி (வயது 27) என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நேற்றைய தினம் வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர் நேற்றைய தினம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply