ரைப்பட பாணியில் நபர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து 65 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடியாக தமது வங்கி கணக்கிலக்கத்திற்கு மாற்றிய பெண் உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் விசாரணைகளில் பின்னர் யாழ் .நீதவான் நீதிமன்றில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை முற்படுத்திய போது , மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாடு அனுப்பவதாக விளம்பரம்
ஆலோசனை கட்டணம் தவிர வேறு வித கட்டணங்கள் இன்றி வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான விளம்பரம் ஒன்றினை நம்பி யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் , விளம்பரத்தில் காணப்பட்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
தொலைபேசியில் , வெளிநாடு செல்வதற்கு உரிய ஆலோசனைகளை கூறியவர்கள் , அடையாள அட்டை , கடவுசீட்டு உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை பிரதி எடுத்து அதனை தமக்கு அனுப்பி வைக்குமாறும், உங்களுடைய வங்கி கணக்கில் பெருந்தொகையை வைப்பிலிட்டு , வங்கி மீதியை பேணுமாறு கூறி , வங்கி மீதியை தமக்கு அறிவுக்குமாறும் கூறியுள்ளனர்.