யாழில் நீரில் மூழ்கி இறந்த இளைஞன் தகவல் அறிந்து உயிர் மாய்த்த இளம் பெண்!!

You are currently viewing யாழில் நீரில் மூழ்கி இறந்த இளைஞன் தகவல் அறிந்து உயிர் மாய்த்த இளம் பெண்!!

யாழ்ப்பாணம் – வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன் என்ற  23 வயது இளைஞராவார்.

நேற்று (17) நண்பர்களுடன் சித்திரை திருநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சுமார் எட்டுப் பேர் அடங்கிய நண்பர்கள் சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய போது மேற்படி இளைஞர் தாமரைக் கொடியில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டு வரணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான பெண் இன்று (18) அதிகாலை வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply