யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு சிறீலங்கா பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை வியாழக்கிழமை (10) இரவு முன்னெடுக்கப்பட்டது.
19 வயதான குறித்த சந்தேக நபரிடம் இருந்து 94 போதை மாத்திரைகளும் 465 கிராம் கஞ்சா கலந்த மாவாவும் மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த சிறீலங்கா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.