யாழ் நெடுந்தீவில் மதுபான சாலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்று (4) ஒன்று கூடிய மக்கள் மதுபான சாலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு , பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுந்தீவில் வடக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் நடமாடும் சேவை நாளைய தினம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இந் நிலையில் இன்றைய தினம் மக்கள் மதுபான சாலைக்கு எதிரான போராட்டத்தை முன்னடுத்து , அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.