யாழில் மீட்கப்பட்ட இனந்தெரியாத நபரின் சடலம் !

You are currently viewing யாழில் மீட்கப்பட்ட இனந்தெரியாத நபரின் சடலம் !

கடந்த 26ஆம் திகதி யாழ். கோப்பாய் சந்திக்கு அருகாமையில்  உள்ள வாய்க்காலில் இருந்து நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்படாமல் இருந்தது.

இந்நிலையில் அந்த சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் வித்திராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், கடந்த மார்ச் 12ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறி யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதிக்கு வந்துள்ளார்.

பின்னர் இருபாலை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

குறித்த நபர் மது அருந்துவதற்காக யாசகம் பெற்று வந்துள்ள நிலையில் மது போதையில் குறித்த வாய்க்காலில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதோடு, கழுத்து எலும்பில் ஏற்பட்ட உடைவு காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply