யாழில் வாந்தி எடுத்து இருவர் மரணம்!!

You are currently viewing யாழில் வாந்தி எடுத்து இருவர் மரணம்!!

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் உறவினர்களின் வீட்டுக்கு சென்று திருமண விருந்து உண்டு விட்டு திரும்பிய நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சுழிபுரம் – பெரியபுலோ மேற்கு பகுதியைச் சேர்ந்த பரஞ்சோதி ததீஸ்கரன் (வயது 29) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருக்கு கடந்த 09.04.2025 அன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தம்பதிகள் இருவரும் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று திருமண விருந்து உண்டுவிட்டு வீடு வந்தவேளை வாந்தி ஏற்பட்டுள்ளது.

இதன்போது, வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றும் வாந்தி குணமாகாத நிலையில் பின்னர் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை

யாழ். கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர், வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் இன்றையதினம்(11.05.2025) சம்பவித்துள்ளது.

நீர்வேலி – பூதர்மடை ஒழுங்கை சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply