யாழில் 14 வயது மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
உதைபந்தாட்டத்திற்கு தேவையான காலணியை தந்தை, வாங்கிக் கொடுக்கவில்லை என்ற விரக்தியில் மாணவன் இந்த தவறான முடிவினை எடுத்துள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை மேற்கு பகுதியில் வசித்து வந்த மாணவனே நேற்றிரவு இவ்வாறு தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக தந்தையால் உடனடியாக காலணியை வாங்கிக் கொடுக்க முடியாத நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த மாணவனது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.