யாழில் இன்று மாலை வட்டுக்கோட்டை சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – பாண்டவட்டை பகுதியில், 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் அறையினுள் அவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வட்டுக்கோட்டை சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை
மட்டக்களப்பு கொக்குவில் சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு பிரதேசத்தில் மாணவன் ஒருவர் விபரீத முடிவால் உயிர்ழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்னர். சம்பவத்தில் மட்டக்களப்பு வெளிச்ச வீட்டு வீதி பாலமீன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த (16) வயதுடைய குரேஸ்குமார் ஹரிஸ்ராஜ் என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.
உயிரிழந்த மாணவன் கா.பொ.த சாதாரணதர வகுப்பில் கல்வி கற்று வந்த நிலையில் கடந்த (30)ம் திகதி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனிமையில் இருந்து தனது கற்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின்னர் அன்றைய தினத்தன்று அவரின் சகோதரன் வீட்டுக்கு வந்து மாணவனை அழைத்த போது எவ்வித சத்தமும் இன்றி இருந்துள்ளது. இதையடுத்து வீட்டின் அறையினுள் உட்சென்று பார்த்தபோ மாணவன் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் அயலவர்களின் உதவியுடன் தூக்கில் இருந்து மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சிறீலங்கா காவற்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது .
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் உத்தரவிற்கமைவான , சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார் .
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்குவில் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாணவன் உயிரிழந்த சமபவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.