யாழில் வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போராட்டம்..!

You are currently viewing யாழில் வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போராட்டம்..!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழில் இன்றையதினம்(20) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனத்தினை வழங்குமாறு வலியுறுத்தியே இப் போராட்டம் இடம்பெறுகின்றது.

இப் போராட்டத்தில், வடக்கு மாகாணத்தை சேர்ந்த  ஏராளமான வேலையற்ற பட்டதாரிகள்  கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக உள்ள உலக தமிழாராட்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபிக்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமாக ஆரம்பமாகிய இப் போராட்டமானது, தொடர்ந்து யாழ் மத்திய பேருந்து நிலைய வீதியூடாக பேரணியாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்தது.

அங்கு பல்வேறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் செயலக வளாகங்களில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply