யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று நோயாளர்கள் தொகை அதிகரித்துவரும் நிலையில் நேற்று மாவட்டத்தில் 174 பேர் உட்பட வடக்கில் 229 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொவிட்19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் யாழ்ப்பாணம் – 174, கிளிநொச்சி – 17, முல்லைத்தீவு -07 ,வவுனியா – 29 மற்றும் மன்னாரில் – 02 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.