யாழில் 35 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!!

You are currently viewing யாழில் 35 வேட்புமனுக்கள் நிராகரிப்பு!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 7 உள்ளூராட்சி சபைக்காக சமர்ப்பிக்கப்பட்ட 159 வேட்பு மனுக்களில் 35 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரான ம.பிரதீபன் தெரிவித்தார்.

வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் இடம்பெற்ற வேட்பு மனுத் தாக்கலிலேயே இந்த எண்ணிக்கைகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் ஓர் மாநகர சபை, 3 நகர சபைகள்,13 பிரதேச சபைகள் காணப்படுகின்றன. இதிலே மாநகர சபையில் 45 உறுப்பினர்களை தெரிவு செய்ய 12 மனுக்கள் தாக்கல் செய்தனர். இவற்றில் தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணியுடன் இரு சுயேச்சைக் குழுவுடன் ஐந்து வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

சாவகச்சேரி நகர சபையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இரு சுயேட்சைக்குழு வேட்பு மனுவும், வலி.மேற்கு பிரதேச சபையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினதும்,
பருத்தித்துறை பிரதேச சபையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய மூன்று கட்சிகளின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையிலே தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி
ஆகிய மூன்று கட்சிகளினதும்,

சாவகச்சேரி பிரதேச சபையிலே இரு சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்களும், காரைநகர் பிரதேச சபையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுவும், ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதேபோன்று நெடுந்தீவு பிரதேச சபையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேடபு மனுவும், வலி.கிழக்கு பிரதேச சபையிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டதோடு
வடமராட்சி.தெற்கு மேற்கு பிரதேச சபையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்ணணி ஆகியவற்றுடன் ஓர் சுயேச்சை வேடபு மனுவும்,
நல்லூர்ப் பிரதேச சபையில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றுடன் ஓர் சுயேட்சை வேட்பு மனுவும் நிராக்கப்பட்டதோடு
வல்வெட்டித்துறை நகர சபையிலே இரு சுயேச்சை குழுவின் வேட்பு மனு உள்படவே 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 136 கட்சிகளும் 23 சுயேட்சைக் குழுக்கழுமாக 159 வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் கட்சிகள் சார்பில்
22 கட்சிகளினதும் 13 சுயேட்சைக் குழுவினதும் வேட்பு மனுக்கலாக 35 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு எஞ்சிய 124 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply