யாழ்ப்பாணத்தில் அண்மையில் மூவர் திடீர் மரணம்!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் அண்மையில் மூவர் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம் – றொட்டியாலடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

செட்டிவளவு, இணுவில் மேற்கு பகுதியை சேர்ந்த  65 வயதுடைய சபாபதிப்பிள்ளை நித்தியானந்தம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தவேளை கீழே மயங்கி விழுந்துள்ளார்.

இதன்போது அந்த வீதியால் வந்தவர்கள் அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மாரடைப்பு காரணமாக மரணம் சம்பத்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

 

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில்  கடந்த 22 ஆம் திகதி வீதியை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய தயநாதன் விதுசன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் ஆவரங்கால் சந்தியால் வீதியை கடக்க முற்பட்பட்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

இந்நிலையில் படுகாயமடைந்த அவர் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

அவரை மோதிய மோட்டார் சைக்கிள் சாரதியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் (22) உயிரிழந்துள்ளார்.

மூளாய் – வேரம் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய தர்சன் பாமினி என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பப் பெண்ணுக்கு  மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

நாட்பட்ட நுரையீரல் அடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply