யாழ்ப்பாணம் – மருதடி வீதியில் உள்ள யாழ். இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது 9 ஆம் திகதி புதன்கிழமை இனம் தெரியாத நபர்களினால் போத்தல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்று காலை யாழ். இந்திய துணை தூதுவரினால் யாழ்ப்பாண சிறீலங்கா காவற்துறையினருக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் யாழ்ப்பாண சிறீலங்கா காவற்துறையினர் மற்றும் சிறீலங்கா தடயவியல் காவற்துறையினர் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம் மீது போத்தல் தாக்குதல்!
