யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பேருந்து விபத்து- சாரதி உள்ளிட்ட மூவர் பலி! 

You are currently viewing யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பேருந்து விபத்து- சாரதி உள்ளிட்ட மூவர் பலி! 

வவுனியா – நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேகமாக சென்ற அன்னை முத்துமாரி அதி சொகுசு பேரூந்து இன்று அதிகாலை 12.15 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதிக் கவிழ்ந்தது.இதன்போது உடுப்பிட்டியைச் சேர்ந்த பேரூந்து சாரதி மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளனர்.இதேவேளை குறித்த பேரூந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ் விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்த மற்றுமொரு சொகுசு பேரூந்து சாரதி தனது பேரூந்தை விபத்து ஏற்பட்டதை தவிர்க்கும் முகமாக வீதியின் ஒரமாக செலுத்தி மற்றுமொரு விபத்தை தவிர்த்திருந்தார்.இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை

வவுனியா விபத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவி உட்பட மூவர் மரணம்: பெயர் விபரம் வெளியாகின.!

யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான நாவலம்பிட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் அஜாகரி (வயது 23).
சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32).
தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 24). ஆகியோர் பலியாகியுள்ளனர்
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பேருந்து விபத்து- சாரதி உள்ளிட்ட மூவர் பலி!  1யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பேருந்து விபத்து- சாரதி உள்ளிட்ட மூவர் பலி!  2யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பேருந்து விபத்து- சாரதி உள்ளிட்ட மூவர் பலி!  3
பகிர்ந்துகொள்ள

Leave a Reply