யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் ஹெரோயினை செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினமிரவு உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி – மட்டுவில் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ரொபின்சன் (வயது 27) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரை 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காணாது உறவினர்கள் தேடியுள்ளனர். பின்னர் தாயாரின் வீட்டிற்கு பின்னால் சடலமாக காணப்பட்டார்.
அவரது சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை ஊசி மூலம் ஹெரோயின் பாவித்ததன் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.