வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறீலங்கா கடற்படையினர் அவதானித்து குறித்த படகினை கடலினுள் வழிமறித்து சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா பொதிகள் காணப்பட்டன.
அதனை அடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியை சேர்ந்த படகோட்டியை கைது செய்த சிறீலங்கா கடற்படையினர் கஞ்சா போதைப்பொருளுடன் படகினையும் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா கடல் நீரில் நனைந்த நிலையில் காணப்பட்டதாகவும் , ஈரத்துடன் அதன் எடை 304 கிலோ 600 கிராம் என தெரிவித்த சிறீலங்கா கடற்படையினர் அதன் பெறுமதி சுமார் 12 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகு என்பவற்றுடன், கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி சிறீலங்கா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.