யாழ்ப்பாணத்தில் நேற்று மேலும் நால்வர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அச்சுவேலியைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த 39 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அத்துடன், பருத்தித்துறை இமையாணன் பகுதியில் மயங்கி வீழ்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் கொவிட் தொற்று நோயால் நேற்று மரணமடைந்துள்ளனர். குறித்த மூவரும் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றய தினம் இரவு மரணமடைந்துள்ளனர்.
குறித்த மூவரும் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது குறித்த பெண்களில் ஒருவர் சுந்திரபுரம் பகுதியில் கொரோனா தொற்றிற்கிலக்காகி உயிரிழந்த முதியவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.