யாழ்ப்பாணம்  வடமராட்சியில் ஆண் ஒருவரின் சடலம்!

You are currently viewing யாழ்ப்பாணம்  வடமராட்சியில் ஆண் ஒருவரின் சடலம்!

யாழ்ப்பாணம்  வடமராட்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நெல்லியடி, புறாப்பொறுக்கி, ஆலடி எரிபொருள் நிலையத்துக்கு அண்மையாக உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து நேற்று (18) இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறைப் சிறீலங்கா காவற்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா காவற்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் சடலத்தைப் பார்வையிட்டுப் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்துச் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன்,  இறந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply