யாழ். ஊர்காவற்துறை சிறீலங்கா காவற்துறை பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 43 வயதுடைய குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த பகுதியின் புதிதாக கட்டுமானம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு நிர்மாணிக்கப்படும் கட்டுமானத்திற்கு அருகாமையில் சடலமானது மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவரின் உடலில் அடி காயங்கள் காணப்பட்டுள்ளன. அத்துடன் கட்டுமானத்தில் இரத்த கறைகளும் காணப்பட்டுள்ளன.
இந் நிலையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சிறீலங்கா காவற்துறையால் சந்தேகிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.