யாழ் – கெருடாவில் பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை சிறீலங்கா காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த 14 வயதான சிறுமியின் காதலனே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய சிறுமி தனது காதலனால் பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதுடன், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.