யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த யாழ் தேவி தொடருந்து மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (15) புதன்கிழமை காலை 10 மணியளவில் சாவகச்சேரி சந்தைக்கு அண்மையில் தனக்களப்பு வீதியில் உள்ள தொடருந்துக் கடவையில் இடம்பெற்றுள்ளது.இவர் தொடருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.