வரலாற்றுப் பிரசித்திபெற்ற பட்டிப் பொங்கல் விழா இன்று திங்கட்கிழமை(16.01.2023) பிற்பகல் காங்கேசன்துறை வீதி, யாழ்.நகரில் உள்ள சத்திரத்து ஞானவைரவர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சத்திரத்து ஞானவைரவர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து கோபூசை வழிபாடுகளும் இடம்பெற்றது.
தொடர்ந்து இன்று பிற்பகல்-02.30 மணியளவில் கோபவனி சத்திரத்து ஞான வைரவர் ஆலய முன்றலில் ஆரம்பமானது. குறித்த கோபவனி மின்சாரநிலைய வீதி,பெரியகடை, யாழ்.பேருந்துநிலைய மேற்கு வீதி, ஆஸ்பத்திரி வீதியூடாக மீண்டும் இன்று பிற்பகல்-03.30 மணியளவில் மேற்படி ஆலயத்தை வந்தடைந்தது.
கோபவனி இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வர்த்தகர்களும், பொதுமக்களும் பசுக்களை வரவேற்று அவற்றிற்குப் பழங்கள் மற்றும் உணவுகள் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து சத்திரத்து ஞான வைரவர் ஆலயத்தில் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன.