யாழ். பலாலியில் 101 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

You are currently viewing யாழ். பலாலியில் 101 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம், பலாலி, அன்ரனிபுரம் கடற்கரை பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபராருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு சிறீலங்கா காவற்துறையினரால் நேற்று வெள்ளிக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சிறீலங்கா காவற்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 67 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 101 கிலோ 833 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பலாலி சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாலி சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply