யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முகநூல் பக்கம் முகநூல் நிறுவனத்தினால் முடக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஒளிப்படங்களை பகிர்ந்தமையால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்தார்.
இதையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய முகநூல் பக்கம் https://www.facebook.com/usuuoj/ என்ற முகவரியில் உருவாக்கப்பட்டுள்ளது.