கடந்த சுதந்திர தினத்தின்போது யாழ்.பல்கலைக்கழகத்தில் பிரதான கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்த தேசியக் கொடியை கீழே இறக்கி அதற்கு பதிலாக அங்கு கறுப்புக் கொடியை ஏற்றியமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும். வக்கிர குணம் உள்ளவர்களால் மாத்திரமே இவ்வாறு நடந்துகொள்ள முடியும் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தெரிவித்துள்ளார்.
இவர் ஒரு கடும்போக்கான இனவாதியும் தமிழின அழிப்பாளியும் என்பது குறிப்பிடத்தக்கது.