யாழ். போதனா வைத்தியசாலைக்கு 268 தாதிகள் நியமனம்!- 208 பேர் சிங்களவர்!

You are currently viewing யாழ். போதனா வைத்தியசாலைக்கு 268 தாதிகள் நியமனம்!- 208 பேர் சிங்களவர்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தாதிய பரிபாலர்களுக்கான வெற்றிடங்கள் ஐந்து இருக்கின்ற போதும் இரண்டு நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே சேவையில் உள்ள தாதிய உத்தியோகத்தர்களில் 168 பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று செல்லவுள்ள நிலையில், புதிதாக வருகை தந்தவர்களில் 60 பேர் மட்டுமே தமிழ் பேசும் இனத்தவர்கள் என்றும், ஏனைய அனைவரும் சிங்கள மொழி பேசுபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலைக்கு நியமனம் பெற்று வந்த 268 புதிய தாதிய உத்தியோகத்தர்களை வரவேற்கும் நிகழ்வு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply