யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி இன்று மீண்டும் பொறுப்பேற்கிறார்.
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி கடமையாற்றிவந்த நிலையில் மேற் படிப்பிற்காக கடந்த பெப்ரவரியில் பிரித்தானியா சென்றிருந்தார்.
இதன் காரணமாக தனது பொறுப்பை தற்காலிகமாகப் பதில் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்துச் சென்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது விடுமுறையில் யாழ். திரும்பிய வைத்தியர் த.சத்தியமூர்த்தியை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மீண்டும் பொறுப்பேற்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டது.
தற்பேததைய கொரோனா பேரிடர் நிலையை கருத்தில் கொண்டு இக்கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய அவர் தனது மேற்படிப்பை குறிப்பிட்ட காலத்திற்கு பிற்போட்டு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மீண்டும் பொறுப்பேற்க முன்வந்துள்ள வைத்தியர் த.சத்தியமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு தனது கடமைகளை மீள பொறுப்பேற்க உள்ளார்.