யாழ் போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர். பரிசோதனை செய்ய 5 ஆயிரம் ரூபாய்!

You are currently viewing யாழ் போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர். பரிசோதனை செய்ய 5 ஆயிரம் ரூபாய்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்காக 5 ஆயிரம் ரூபா அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கைப் பிரஜைகள் மாத்திரமே இலவச சுகாதார சேவைக்கு உரித்தானவர்கள் என்பதுடன் வெளிநாட்டு பிரஜைகள் தங்கள் மருத்துவ செலவுகளுக்காக உரிய கட்டணங்களை அரசாங்க வைத்தியசாலைகளுக்கு செலுத்தியே ஆகவேண்டும் என தெரிவித்துள்ளது.

அதன்படி வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு கட்டணமாக 5000 ரூபா அறவிடப்படுகின்றது.

இப்பணம் உரிய முறையில் அரசாங்கத்தின் கணக்கில் வைப்பிலிடப்டப்படுவதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலையில் இச் சேவையைப் பெற்றுக்கொள்வோர் எதிர்மறை (negative) முடிவாயின் நேரடியாக விமானநிலையம் செல்லமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply