யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோயின் தாக்கம் இருப்பதாக, யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி விசேட வைத்திய நிபுணர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்,
வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார் 3000க்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
குறிப்பாக கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்த கொவிட் காலப் பகுதியில் இளைஞர் யுவதிகள் அதாவது 20 – 40 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீரிழிவு நோய் ஏற்படும்போது ஏற்படும் அந்த சில அறிகுறிகளை அடையாளம் கண்டு உரிய முறையில் சிகிச்சை மேற்கொள்ளும் போது, குறித்த நோயிலிருந்து மீள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.