யாழ்.மாவட்டத்தில் 17243 குடும்பங்களை சேர்ந்த 57 ஆயிரத்து 513 பேர் பாதிப்பு!

You are currently viewing யாழ்.மாவட்டத்தில் 17243 குடும்பங்களை சேர்ந்த 57 ஆயிரத்து 513 பேர் பாதிப்பு!

யாழ்.மாவட்டத்தில் நேற்று மாலை தொடக்கம் பெய்த கன மழையினால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக யாழ்.மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட செயலர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இன்று நண்பகல் 12.30 வரையான தகவல்களின்படி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.

அதன்படி 17 ஆயிரத்தி 243 குடும்பங்களைச் சேர்ந்த 57 ஆயிரத்தி 513 நபர்கள் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் “புரவி” புயல் கடந்த இரண்டாம் திகதி இலங்கையின் வடபகுதி ஊடாக கரையைக் கடந்தது.

இதனால் மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ள பாதிப்பை எதிர்கொண்டது பெருமளவு மக்கள் தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேறியதுடன் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் “புரவி” புயலானது மன்னாருக்கு வடமேற்கு திசையில் வலு குறைந்து நிலைகொண்டிருக்கும் நிலையில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து வடமேற்காக புத்தளம் வரையிலும் வடகிழக்காக திருகோணமலை வரையிலும் கரையோர பகுதி மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை ஆரம்பித்து இன்று அதிகாலை வரை தொடர்ந்த நிலையில் மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகளில் மீண்டும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதனால் ஏற்கனவே புரவி புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் வெள்ளநீர் புகுந்துள்ளது மக்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

பகிர்ந்துகொள்ள