யாழ் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் 5,908 குடும்பங்களை ச் சேர்ந்த 19,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.