யாழ்.மாவட்டத்தில் 99 பேர் உட்பட வடக்கில் இன்று 111 பேருக்கு தொற்றுறுதி!

You are currently viewing யாழ்.மாவட்டத்தில் 99 பேர் உட்பட வடக்கில் இன்று 111 பேருக்கு தொற்றுறுதி!

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தில் 99 பேர் உட்பட வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 111 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 53 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 53 பேருக்கு தொற்றுறுதி

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 29 பேர்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் 03 பேர்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் 04 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர்,

மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 03 பேர்,

வவுனியா மாவட்டத்தில் 04 பேர்,

செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர்

மாந்தை கிழக்கில் ஒருவர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் ஐந்து பேர்

பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர்,

மன்னார் மாவட்டத்தில் ஒருவர்

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

இவர்களுடன் கிளிநொச்சி முள்ளியான் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூட முடிவுகள்

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 246 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்,

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேர்,

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர்,

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தம்பாட்டி கிராமத்தில் அன்டிஜன் பரிசோதனையில் 08 பேருக்கு தொற்றுறுதி

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட தம்பாட்டி கிராமத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 08 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தம்பாட்டியில் 82 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply