யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு!!

You are currently viewing யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு!!

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்குள் நேற்று(27.03.2025) இரவு 10 மணியளவில் உள் நுழைந்த அதே பகுதியை சேர்ந்த சிலர் உடமைகளை சேதப்படுத்தியதுடன் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டையும் நிகழ்த்தியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர் மருதங்கேணி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினருக்கு வைத்தியசாலை சிறீலங்கா காவற்துறையினரால் முறைப்பாடளிக்கப்பட்டது.

இதன் பிரகாரம், மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினர் பருத்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்று தாக்குதலுக்கு உள்ளாகியவரிடம் வாக்குமூலம் பெற்றதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply