யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உடுத்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டுக்கு ஆழியவளை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்று கலந்துரையாடியபோது அது வாக்குவாதமாக மாறி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த ஆழியவளையைச் சேர்ந்த குடும்பஸ்தர் மருதங்கேணி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காகப் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.