யாழ்ப்பாணம் வடமராட்சி நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீதும் அதன் அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீதும் சிறீலங்கா வான்படை புக்காரா விமானங்கள் நடாத்திய மிலேச்சுத் தனமான குண்டு வீச்சுத் தாக்குதலின்போது படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பாடசாலை மாணவர்கள் 21,பேர் உட்பட்ட 40,பேரினதும்
28,வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
1995,ம் ஆண்டு இதே நாள் வழமை போன்று பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் வகுப்பறைகளில் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை திடீரெனவடமராட்சி வான் பரப்பில் பேரிரைச் சலுடன் நுழைந்த இரண்டு புக்காரா குண்டு வீச்சு விமானங்கள் பாடசாலை மீதும் அதன் அருகாக மக்கள் குடியிருப்புகள் மீதும் அடுத் தடுத்து எட்டுக் குண்டுகளை வீசி 21,மாணவர்கள் உட்பட்ட 40, பேரை
நரபலி எடுத்துவிட்டுச் சென்றன.
இந்தக் குண்டுவீச்சுத் தாக்குதலின்போது 42, மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.