அதிக தொற்றாளர்கள் குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
யாழ். வடமராட்சி, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட ஜே-401 கிராம சேவகர் பிரிவில் உள்ள பகுதி இன்று அதிகாலை 6.00 மணி முதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை 2ஆம் குறுக்கு தெருவில் வசித்து வருவோரிடையே கடந்த சனிக்கிழமை (ஜூலை-10) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து குறித்த பகுதியை தனிமைப்படுத்துவதற்காக சுகாதாரத் தரப்பினரால் கொவிட்-19 செயலணிக்கு பரிந்துரைக்கப்பட்டு அதற்கான முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இன்று அதிகாலை 6.00 மணி முதல் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக இராணுவத் தளபதியால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.