யாழ் விபத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளர் பரிதாபமாக உயிரிழப்பு !

You are currently viewing யாழ் விபத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளர்  பரிதாபமாக உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் – சுதுமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்  பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தாவடி  சுதுமலைப் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த  64 வயதுடைய அன்னலிங்கம் செந்தில்குமரேசன்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 7.30 மணியளவில் குறித்த நபர் மானிப்பாயில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தபோது எதிரே வந்த கார் மோதியதியுள்ளது.

இதன்பின்னர் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்துள்ள போதிலும் 30 நிமிடங்களின் பின்னரே நோயாளர் காவு வண்டி, குறித்த இடத்திற்கு வருகை தந்தததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதையடுத்து, குறித்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

நோயாளரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தால் அவரை  காப்பாற்றியிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply