யாஹ்வா சின்வாரின் மரணத்திற்கு பின்னர் ஹமாஸின் அடுத்த தலைவர் யார் என்ற சர்வதேசத்தின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய தலைமைக்கு தகுதியானவர்களின் பெயர்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது இஸ்ரேலால் கொல்லப்பட்டார்.
மேலும், காசாவில் கடந்த மாதம் 21ஆம் திகதி இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் மற்றுமொரு தலைவரான சின்வார் பலியாகினார்.
இந்நிலையில் தலைவர்களை கொல்வதால் தங்கள் அமைப்பை அழிக்க முடியாது என்று ஹமாஸ் இஸ்ரேலுக்கு கடும் சவாலை விடுத்துள்ளது.
அதன்படி, யாஹ்வா சின்வாரின் இளைய சகோதரர் முகமது சின்வார் தலைவர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இவர் ஹமாஸ் ஆயுதப்படைப் பிரிவின் மூத்த கட்டளைத்தளபதிகளில் ஒருவராக தற்போது செயற்பட்டு வருகின்றார்.
கட்டாரில் இடம்பெற்ற அமெரிக்க உள்ளிட்ட நாடுகளால் ஏற்பாடு செய்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் சார்பில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தியவராக கலீல் அல் ஹய்யா கருதப்படுகின்றார்.
இவர்களை தவிர்த்து 2004 முதல் 2017 வரை ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த காலெத் மஸீல் மற்றும் ஹுஸ்மான் பாத்ரான் என்ற உயர்மட்ட தலைவரும் பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.