தலைநகர் நோக்கி நகர்வோம்
உணர்வாய் திரளாய் எழுவோம்.
தமிழீழ தேசத்தின் சுதந்திர உரிமைப் போராட்டத்தில் நிகழ்ந்தேறிய பல்வேறு தியாகங்களிலே, ஒரு மகத்தான புதிய அத்தியாயத்தை அகிம்சை வழியில், பன்னிரண்டு நாட்கள் ஒருசொட்டு நீர்கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து, அகிம்சையின் நாயகனாக திகழும் தியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் 36வது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான எதிர்வரும் 26.09.2023 (செவ்வாய்க்கிழமை) பி.பகல் 13.00 மணிக்கு, யேர்மனியின் தலைநகரிலே உணர்வெழுச்சியோடு அணிதிரள்வோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான கூட்டத் தொடர் இடம்பெற்றுவரும் இச்சமகாலத்தில், மனித உரிமைகளை சிறிதளவேனும் மதிக்காது, தமிழ் மக்களின் இயல்பு வாழ்வை கேள்விக்குறியாக்கி, சிங்கள பேரினவாத அரச புலனாய்வாளர்களும், காவல்த்துறையினரும், இராணுவத்தினரும் கூட்டிணைந்து சிங்களக் காடையர்களை முன்னிறுத்தி, தமிழ் மக்கள் மீதும், தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனிமீதும், தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர் மீதும், தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் வைத்து கடந்த 18.09.2023 அன்று நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும், தொடர் வன்முறைகளையும் கண்டிப்பதோடு, அவற்றை உலக நாடுகளுக்கும் அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையிலே முக்கிய பங்கு வகிக்கும் யேர்மனிய அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்வோம்.
அடிப்படை மனித உரிமைகள் காக்கப்படுவதாகவும், சனனாயக வழிமுறையிலான விடயங்களுக்கு தடையில்லையெனவும், உலக நாடுகளுக்கு பொய்யுரைத்து தனது வர்த்தக பொருளாதார நலன்களை ஈடேற்றிவரும் ஸ்ரீலங்கா அரசின் இரட்டை முகத்திரையை உலக அரங்கிலே மீண்டும் அம்பலப்படுத்தி, இன்னும் எமது நியாயங்களை நீதிகொண்டு பார்க்கத் தவறும் பன்னாட்டு அரசுகளின் மனங்களிலே எம்மை நோக்கிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய காலக் கட்டாயத்தை தியாக தீபத்தின் இக்காலம் உணர்த்தி நிற்பதை ஏற்று நாம் திரட்சி கொள்வோம்.
அன்பான உறவுகளே!
தமிழ் மக்களின் இருப்பை தாயகத்திலே உறுதி செய்வதற்கும், அச்சமின்றிய இயல்பு வாழ்வை எமது பூர்வீக மண்ணிலே தொடர்வதற்குமான வேண்டுதலை உலகு நோக்கி முன்கொண்டு செல்லும் அவசர நிலையுணர் கால அழைப்பாக ஏற்று இணைவதோடு, எமக்காக எமது எதிர்கால நலனுக்காக பன்னிரு நாட்களாக மெழுகாய் உருகி உயிர் தந்த உன்னதனின் நம்பிக்கையாக இருந்த “மக்கள் புரட்சி” எனும் தடத்திலே, அவரது தீபமேந்தலின் திடலிலே ஒன்றிணைவோம்.
“நான் என்னுயிரினும் மேலாக நேசிக்கும் மக்களே! உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். இங்கு ஒரு மாபெரும் புரட்சி வெடிக்கட்டும்”
– தியாகதீபம் லெப்.கேணல்.திலீபன் அவர்கள்-
இடம்:
Auswärtiges Amt
Werderscher Markt 1
10117 Berlin
காலம்: 26.09.2023(செவ்வாய்க்கிழமை)
நேரம்: பி.ப 13.00 மணி.
நன்றி.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.