யேர்மனியில் மே4 ஆம் திகதியிலிருந்து மே17 திகதி வரை 14 நகரங்களில், சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பினை , வேற்றின மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 11.05.2022 அன்று முன்ஸ்ரர் (Münster) வாழ் மக்களால் நகர மத்தியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழின அழிப்பின் அவலத்தைக் கண்முன் காணும் ஓவியக் காட்சிப்படுத்தல்கள் பார்ப்பவர் மனங்களை மிகவும் பாதித்திருந்தன. இதேவேளை மனிதநேயச் செயற்பாட்டாளர்களும், இளையவர்களும் இணைந்து துண்டுப்பிரசுரங்களை வழங்கி தமிழின அழிப்பின் வலியினை வேற்றின மக்களுக்கு எடுத்து விளக்கினர்.







