இந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து வட தமிழீழம் , யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 36 ஆவது நினைவு தினம் தமிழீழத்தில் தொடங்கி புலம்பெயர் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக கடந்த மாதம் 26 ஆம் திகதி அன்று அனுஸ்டிக்கப்பட்டது
இதன் ஒரு பகுதியாக தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று யேர்மனி-ஸ்ருட்காட் மாநகரில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது







