ரணிலின் இனவாத முகத்தை அம்பலப்படுத்தினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி!

You are currently viewing ரணிலின் இனவாத முகத்தை அம்பலப்படுத்தினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி!

ரணில் விக்கிரமசிங்கவின் சமஸ்டிக்கு விரோதமான இனவாத முகத்தை அம்பலப்படுத்தினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி

ஜனாதிபதி ரணில் விங்கிரமசிங்க அவர்கள் கடந்த 03-08-2022 அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய அக்கிராசன உரை மீதான விவாதத்தில் 12-08-2022 அன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் உரையாற்றியிருந்தார். அவரது உரையின் முழுவிபரம் வருமாறு.

 அவைத்தலைவர் அவர்களே, ஐனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் கூறப்பட்ட விடயங்களில் எங்களுக்கு மிகுந்த கரிசனைக்குரியனவற்றுக்குச்  செல்கிறேன். அவரது உரையில் ஒரிடத்தில் வடக்கு – கிழக்கு தொடர்பாகக் குறிப்பிட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். அவரது உரையின் இறுதிப்பகுதியில் ஒரு பந்தியில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

‘தமிழ்ச் சமூகத்தினர் நீண்ட காலமாக எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு அரசியற் தீர்வு காண்பதும் அவசியமாகிறது. யுத்தம் காரணமாக அவர்கள் பல சமூக, பொருளாதார பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்துவருகிறார்கள். காணிப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். வடக்கின் பொருண்மிய மேம்பாட்டு விடயத்தில் நாங்கள் புதிய வழிமுறைகளைச் சிந்திக்க வேண்டும். இலங்கையை மீள்கட்டுமானம் செய்யும் வேலைத்திட்டத்திற்கு  இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதன் மூலம்  அவர்களின் ஆதரவினைப் பெறமுடியும் என  நம்புகிறோம்.  அவர்களது வருகையினையும், தமது தாய் நாட்டில் அவர்களது முதலீடுகளையும் நாம் எதிர்பார்க்கிறோம்.’.

ஏன்பதாக ஜனாதிபதியின் உரையில் வடக்கு – கிழக்கு வாழ் தமிழர்கள் தொடர்பாக இந்தவொரு குறிப்பினை மட்டுமே காணமுடிந்தது.  

நான் எனது கருத்துக்களை மேற்குறித்த விடயத்திலிருந்து ஆரம்பிக்றேன்;, மிக நீண்ட காலத்திற்கு முன்பு அல்ல, 2001ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை பெற்றிருந்தது.  திரு. விக்கிரமசிங்க  பிரதமராக நியமிக்கப்பட்டார்.  ஜனாதிபதி குமாரணதுங்க ஜனாதிபதியாகத் தொடர்ந்தார். அப்போது திரு.ரணில் விக்கரமசிங்க அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். சமாதான நடவடிக்கைகள் என அழைக்கப்பட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. விடுதலைப்புலிகளுடனான பேச்சவார்த்தைகளில் ஒஸ்லோ பரிவர்தனை (ழுளடழ ஊழஅஅரnஙைரé) அறியப்பட்ட உடன்பாடு எட்டப்பட்டது.

அவைத்தலைவர் இவற்றை அறிவார் என நம்புகிறேன். உங்களுடைய முன்னைய தொழில்களில் ஒன்றாக அக்காலகட்டத்தில் நீங்கள் பேர்கோவ் பவுண்டேசன் அமைப்பில் பணிபுரிந்தீர்கள். அப்போதுதான் முதற்தடவையாக நான் உங்களைச் சந்தித்தேன்.

அந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒஸ்லோ பரிவர்தனை வெளியானபோது அந்தப் பரிவர்த்தனையில் குறிப்பிட்பட்ட விடயங்களுக்கும் நாட்டிலிருந்த நடைபெற்று வந்த விடயங்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டது.  இதுவிடயத்தில்  விடுதலைப்புலிகளுக்கு மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் கரிசனையிருந்தது. நான் அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருந்தேன்.

சமஷ்டி முறையை பரிசீலிப்பதாக ஒரு பரிவர்த்தனையுடன் திரு. விக்கிரமசிங்க உடன்பட்டிருந்தாலும் நாட்டில் நடைபெற்ற சம்பவங்க்ள் அதற்கு நேரெதிராக அமைந்திருந்தது.  நிலைமையை வழமைக்கு கொண்டுவருவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் அப்போது அராசாங்கத்துடன் முரண்பட்டுக்கொண்டிருந்த ஜனாதிபதியை குற்றசாட்டி தப்பித்துக்கொள்ளும் அணுகுமுறையே அவரால் கையாளப்பட்டது.

அரசகட்டமைப்பை ஒரு சம்ஷ்டி முறையாக மாற்றுவது தொடர்பில் அரசுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ எந்த அக்கறையும் இருப்பதனை நாட்டு நிலவரங்கள் வெளிக ;காட்டவில்லை.  உண்மையில் ஒரு மாற்றத்திற்கு அவர்கள் தயாராக இருந்திருந்தால் நிலமை வேறுவிதமாக அமைந்திருக்கும்.

ஆனால் அரசாங்கம் வேறுவிதமான பரப்புரைகளை மேற்கொண்டுவந்தது.  வசதியாக பழியை விடுதலைப் புலிகள் மீது சுமத்தித் தப்பிக்கொண்டது.  அதன் நீட்சியாக பழி தமிழ் மக்கள் மீதும் போடப்பட்டது.  தமிழர்களே சமஷ்டித்தீர்வு விடயத்தில்  அக்கறை கொள்ளவில்லை என பழிசுமத்தப்பட்டது. இவ்விதம்  சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது.  தமிழர்கள் இதில் அக்கறையில்லாது இருக்கிறார்கள் அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை வலியுறுத்துகிறார்கள் ஆதலால் அவர்களுக்கு எதிராக இராணுவநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனக் கூறப்பட்டது.

அந்நேரத்தில் அவருடன் முரண்பட்டுக்கொண்டிருந்த அப்போதைய ஜனாதிபதியைக் காரணங்காட்டி பிரதமர்ரணில் விக்கிரமசிங்க இதிலிருந்த தப்பியிருக்கலாம். ஆனால் இன்று நிலைமை முழுமையாக மாற்றமடைந்துள்ளது.  அவர் மிக முக்கியமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக உள்ளதால் முழு நாடும் அவரது விரல் நுனியில் இருக்கிறது.  எங்களது கட்சியையும் வேறும் ஒருசிலரையும் தவிர மிகுதி உறுப்பினர்கள் அவருடன் இணைந்து பணிபுரியத் தயாராக இருக்கிறார்கள்.  அவருக்கு இந்த அவையின் முழு ஆதரவு இருக்கிறது. 2020 இலிருந்து இந்தநாட்டை சீர்குலைத்துவரும் இந்த அரசாங்கம் தஙகளைப் பிணையெடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவில் தங்கியிருக்கிறது. இந்நாடாளுமன்றம் திரு. விக்கிரமசிங்கவில் தங்கியிருக்கிறது.

திரு. விக்கிரமசிங்க தான் இணங்கிய ஒஸ்லோ பரிவர்த்தனைக்கு நேர்மையானவராக இருப்பின் அந்தவிடயத்தை மீள எடுக்கலாம். இந்தச் சபை மூலமாக அதனைச் சாதிக்கலாம். இச்சபை மூலமாக முழு நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்தவற்றைக் கூறி, அவர்களது உரிமைகள் வழங்கப்பட வேண்டும். சமஷ்டி முறைமை பிரிவினையல்ல என்பதனைத் தெரிவிக்கலாம்.  ஆனால் அதற்கு நேரெதிராக, இம்முறைமைய ஜனநாயகத்தைப் பேணுவதற்கும்,  இச்சபையை பொறுப்புக்கூற வைப்பதற்கும் அது உதவும். சமஷ்டி முறைமைமுறையான தலைவர்களை உருவாக்க உதவும். இவற்றை அவர் தெரிவித்திருகலாம். ஆனால் திரு. விக்கிரமசிங்க அதுபற்றி ஒரு வார்த்தையைத்தானும் கூறவில்லை  அதற்கு மாறாக அவர் தன்னை ஒருசிறிலங்கனாகவும், சிறிலங்கன் என்ற அடையாளத்தைக் வேண்டுவதாகவும் தெரிவித்திருக்கிறார்

அவர் குறிப்பிடும் சிறிலங்கன் அடையாளம் என்பது ஏனைய அடையாளங்களை மறுதலிப்பதாக அமைந்திருக்கிறது மற்றைய அடையாளங்களை பிளவுகளாக அவர் கருதுகிறார்.  எங்களுக்கிடையிலான  வேறுபட்ட அடையாளங்களை மறந்துவிடுமாறு கூறுகிறார்.  மாறுபட்ட அடையாளங்கள் இலங்கையை பலவீனப்படுத்துவதாக அவர் கூறுகிறார். உண்மையாகவே 2001-2002 காலப்பகுதியில் அவர் கொண்டதாகக் கூறிய நிலைப்பாடும். சர்வவல்லமை கொண்ட ஜனாதிபதியாக அவர் இப்போது கூறுவதும் நேரெதிரான நிலைப்பாடுகள்.  இவை இரண்டும் ஒன்றாக இருக்கமுடியாது. இவற்றில் உண்மையான விக்கிரமசிங்க யார்?

இவ்விடயத்தில் நம்பகத்தன்மை தொடர்பில் பாரிய பிரச்சனையிருக்கிறது. இதனையை தமிழர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகிறார்கள். எது எப்படியிருப்பினும், இறுதியில் அவர் எவ்வாறு இந்நாட்டின் ஜனாதிபதியானார் என்பதனைப் பிரதிபலிக்க வேண்டியவராக உள்ளார். போராட்டம் சில சமயங்களில் வன்முறைவயப்பட்டதாக இருந்தது உண்மைதான். ஆனால் அதனை அவர் இப்போது பயங்கரவாதம் என்றும் அழைக்கிறார். அவர் எதிரக்கட்சி வரிசையில் அமரந்திருந்தபோது இப்போராட்டத்தை அவர் பயங்கரவாதம் என அழைக்கவில்லை. மாறாக, மக்கள் போராட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என திரும்பத்திரும்பக் கூறியிருந்தார். நான் ,

இதற்கு முன்னரும் ஒரு தடவை கூறியிருந்தேன், ‘ஒரு வன்முறையற்ற போராட்டம் வன்முறையற்ற வகையில் முன்னெடுக்கப்படும்போது, முழு நாடும் மாற்றம் அவசியம் என்று கூறும்போது ஏனெனில் இந்தப்போராட்டத்தின் நோக்கமே மக்கள் தாம் வழங்கிய ஆணையைத் திரும்பிபெறுவதாக இருக்கிறது. மக்கள் தாம் வழங்கிய ஆணையை மீளப்பெற விரும்புவதனை முழுஉலகமும் அறியும். அவர்கள் புதிய ஆணையைக் கோருவதற்கு காரணம் தாம் நம்பிக்கை இழந்த இந்த அவையை கலைத்து மக்களின் நம்பிக்கையை பெற்ற அவையை அமைப்பதற்காகும். நீங்கள் அதற்கு வழிவிடுவதில்லை  என முடிவுசெய்துள்ளீர்கள். மாறாக ,  நிலைமையை உங்களுக்கு ஏற்றவகையில் கையாண்டு ஜனாதிபதி எனும்  இந்நிலைக்கு உயர்ந்துள்ளீர்கள்.

அப்படியாக பதவிக்கு வந்த பின்னர்,  எந்த வழிமுறையில் நீங்கள் ஜனாதிபதிப் பதவிக்கு வந்தீர்களோ அந்த வழிமுறையையே  பயங்கரவாதம் என்றும் வன்முறை என்றும் வர்ணிக்கிறீர்கள். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொளள முடியாது. திரு ரணில் விக்கிரமசிங்க  இவ்வாறு நடந்துகொள்வதற்குக் காரணம் ஆளும் கட்சியினருக்கு அவர் கடமைப்பட்டவராக இருப்பதேயாகும். அவர் பொதுசன முன்னணிக்கு கடமைப்பட்வராக இருக்கிறார். இந் நாடாளுமன்றம் ஜனநாயகமற்ற முறையில் வழங்கிய  தீர்ப்புக்கு ஃ பதவிக்கு  கட்டுப்பட்டவராக இருக்கிறார். மக்களின் குரலை நசுக்கி அதனைப் பூச்சியத்திற்கு கொண்டு வருவதன் மூலம் அக்கட்சியினருக்கு தனது நன்றியறிதலை வெளிப்படுத்துவதே இப்போது  அவருக்குள்ள ஒரே வழியாக இருக்கிறது.  அதனையே அவர் செய்கிறார். 

—இந்த காரணங்களாலேயே நாம் கூறுகின்றோம். உடனடியாக அவசரகால சட்டத்தை நீக்கி கைதுசெய்து அடைக்கப்ப்ட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்; அல்லாவிடின் நீங்கள்அழைப்பு விடுத்திருக்கின்ற சர்வகட்சி அரசு என்பது உங்கள் பதவியையும் அதிகாரத்தையும்பாதுகாக்கும் ஒரு நாடகம் என்றே எமது கட்சியின் உறுதியான நிலைப்பாடாகும்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply