ரஷிய படைகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவு! உலகநாடுகள் நடுக்கம்!

You are currently viewing ரஷிய படைகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவு! உலகநாடுகள் நடுக்கம்!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. ரஷியாவை எதிர்த்து போரிடும் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.

ரஷியாவுடன் இணைந்து வடகொரிய படைகள் தாக்க உள்ளதால், தொலைதூரத்தில் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்க அரசு உக்ரைனுக்கு அனுமதி அளித்தது.

இதனால் அதிபர் புதின், ரஷிய படைகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளதால் போர் தீவிரமடைந்துள்ளது.

எந்நேரமும் உக்ரைனில் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், உக்ரைன் வாழ் அமெரிக்கர்களும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply