ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

You are currently viewing ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில்  7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

நிலநடுக்கம் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்நிலையில் கெம்சாட்கா (Kamchatka) தீபகற்பத்துக்கு அருகே நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்துக்குப் பிறகும் அதிர்வுகள் ஏற்பட்டதாக ரஷ்யாவின் புவியியல் சேவைப் பிரிவு அதன் இணையத்தளத்தில் தகவல் வெளியிட்டது.

அங்குள்ள கட்டடங்களைத் தீயணைப்பாளர்களும் மீட்புக் குழுவினரும் சோதனை செய்து வருகின்றனர்.

அத்துடன் ரஷ்யாவில் சுனாமி ஏற்படக்கூடும் எனும் எச்சரிக்கையை அமெரிக்காவின் தேசிய சுனாமி எச்சரிக்கை நிலையம் விடுத்தது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments