உக்ரைனில் ரஷ்யா நடத்தி தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். உக்ரைனின் கீவ், லிவிவ், ஒடேசா, டினிப்ரோ, கார்கிவ், சபோரிஜியா மற்றும் பிற நகரங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தியதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மேலும் அவரது பதிவில், ரஷ்யாவின் தாக்குதலால் ஒரு மகப்பேறு வார்டு, கல்வி வசதிகள், ஒரு ஷொப்பிங் மால், பல மாடி குடியிருப்பு கட்டிடங்கள், தனியார் வீடுகள் ஆகியவை பாதிக்கப்பட்டன.
Strikes காரணமாக பாரிய உயிரிழப்புகள், காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதனை குறிப்பிட்டு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ரஷ்யாவை கடுமையாக கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ரஷ்யாவின் இந்த சமீபத்திய மிருகத்தனமான தாக்குதலை அடுத்து, உக்ரேனிய மக்களின் துணிச்சலும் பின்னடைவும் நிலவுகிறது. வோலோடிமிர், உங்கள் போராட்டம் எங்கள் போராட்டம். கனடா உக்ரைனுடன் தொடர்ந்து நிற்கும். அதனை எது தடுத்தாலும், கடைசி வரை துணை நிற்போம்’ என கூறியுள்ளார்.