ரஷ்யாவின் நடவடிக்கையால் எச்சரிக்கை நிலையில் நேட்டோ உறுப்பு நாடுகள்!

You are currently viewing ரஷ்யாவின் நடவடிக்கையால் எச்சரிக்கை நிலையில் நேட்டோ உறுப்பு நாடுகள்!

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுடன் கூடிய விமானங்களை பாலிடிக் கடலின் மேற்கு பகுதிக்கு அனுப்பியுள்ளதாக ரஷ்யா அறிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஐந்து மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த போர் தாக்குதலானது உக்ரைனிய எல்லையை கடந்து நேட்டோவின் உறுப்பு நாடுகளான போலந்து மற்றும் லிதுவேனியா ஆகியவற்றிக்கு பரவும் எச்சரிக்கை உருவாக்கியுள்ளது

இதனைத் தொடர்ந்து உக்ரைன் போர் எல்லைகளைத் தாண்டி பரவும் என்று எச்சரிக்கையை அடுத்து அமெரிக்கா போலந்து மற்றும் லிதுவேனியாவில் ராணுவ துருப்புகளை நிறுத்தியுள்ளது.

ஆனால் அமெரிக்கா மற்றும் நேட்டோவுடன் நேரடி மோதல்கள் இல்லை என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இவான் நெச்சயேவ் வலியுறுத்தினார்.

இந்தநிலையில், பால்டிக் கடற்கரையில் போலந்து மற்றும் லிதுவேனியா இடையே உள்ள ரஷ்ய மாகாணமான கலினின்கிராட்டில் உள்ள Chkalovsk விமான தளத்திற்கு மூன்று MiG-31 போர் விமானங்கள் மற்றும் Kinzhal ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் வந்தடைந்துள்ளது.

மூலோபாய தடுப்பு நடவடிக்கைகளின் பகுதியாக இந்த ஆயுதங்கள் பிராந்தியத்திற்கு நகர்த்தப்பட்டன, போர் விமானங்கள் 24 மணி நேரமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தாக AP தெரிவித்துள்ளது.

இதுத் தொடர்பாக ரஷ்ய இராணுவத்தால் வெளியிடப்பட்ட வீடியோவில், மிக் -31 கள் கலினின்கிராட் வந்தடைவதைக் காட்டுகிறது, ஆனால் அவை ஏவுகணைகளை வைத்திருக்கவில்லை, அவை தனித்தனியாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் Kinzhal ஏவுகணைகள், மாஸ்கோ ஏற்கனவே உக்ரைனில் உள்ள பல இலக்குகளைத் தாக்கப் பயன்படுத்தியுள்ளது சுமார் 1,250 மைல்கள் வரை வரக்கூடியது மற்றும் ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறக்க முடியும் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply