உக்ரைன் விடயத்தில், ரஷ்யா அடையப்போகும் வெற்றி தவிர்க்க முடியாதது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
St.Petersburg இலுள்ள ஆயுத உற்பத்திச்சாலைக்கு வருகை தந்திருந்த ரஷ்ய அதிபர், அங்கு வைத்து ஊடகங்களுக்கு தெரிவித்த பொது, உக்ரைன் விடயத்தில் ரஷ்யா வெற்றியடையும் என்பதில் தனக்கு சந்தேகமேதும் இல்லையெனவும், இந்த வெற்றி தவிர்க்க முடியாததகும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2023 ஆரம்பத்திலிருந்து, உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருக்கும் ரஷ்யப்படைகள், உக்ரைனிய பகுதிகளுக்குள் கணிசமான முன்னேற்றத்தை கண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யப்படைகள் ஏவிவரும் ஏவுகணைகளை உக்ரைனிய ராடார்களால் கண்டுபிடிக்க முடியாததால், உக்ரைன் பேரழிவை சமீப நாட்களாக சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ரஷ்ய ஏவுகணைகளால் உக்ரைனிய குடியிருப்புக்கள் சேதமாகியுள்ளதோடு, மனித உயிர்களும் பலிகொள்ளப்பட்டுள்ளமையும் நினைவுகூரத்தக்கது.